கொரோனா தடுப்பூசியில் “சதி“ இருக்கு… இப்படி கூறும் ஃபார்மசிஸ்ட்! காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியால் ஆண்மைக் குறைபாடு வரும் எனக்கூறி ஃபார்மசிஸ்ட் ஒருவர் பயன்பாட்டுக்கு வைத்து இருந்த தடுப்பூசிகளை வேண்டுமென்றே சேதப்படுத்தி உள்ளார். மேலும் இத்தடுப்பூசியில் சிப் பொருத்தப்பட்டு இருக்கிறது, மனிதர்களுக்குத் தடுப்பூசி அவசியமே இல்லை எனவும் கூறி இருக்கிறார். ஒரு ஃபார்மசிஸ்ட் இப்படி கூறுவதற்கான காரணம்தான் தற்போது உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்டீவன் பிராண்டன்பர்க் (46) எனும் ஃபார்மசிஸ்ட் கடந்த டிசம்பரில் பயன்பாட்டு வைக்கப்பட்டு இருந்த 500 மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வேண்டும் என்றே குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்து உள்ளார். அதை 3 மணி நேரம் கழித்து மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் பத்திரமாக வைக்கவும் செய்து விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அதே தடுப்பூசிகளை 9 மணிநேரம் வெளியே வைத்து விட்டார். இச்செயலால் அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 600 தடுப்பூசிகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்தால் அது சேதம் அடையும் என தெரிந்தேதான் இதைச் செய்தேன் என்றும் ஒப்புக்கொண்டு உள்ளார்.
எஃபிஐ அதிகாரிகள் தறபோது ஸ்டீவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் வெளியான தகவல்கள்தான் தற்போது உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஒரு ஃபார்மசிஸ்ட் ஆக இருக்கும் ஸ்டீவன் கொரோனா தடுப்பூசியால் ஆண்மைக் குறைபாடு வரும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு எந்த நோயுமே வந்தது இல்லை. தற்போது போட்டுக் கொள்ளும் தடுப்பூசிகளால்தான் மேலும் மேலும் மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. அதோடு கொரோனா தடுப்பூசியில் சிப் வைக்கப்பட்டு உள்ளது. இப்படியெல்லாம் கூறி இருக்கிறார். இந்தக் கருத்துகளை கேட்ட எஃபிஐ இவர் ஒரு கான்ஸ்பிரைஸி எனக் குற்றம் சாட்டியதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
கான்ஸ்பிரைஸி (Conspiracy) இது சூழ்ச்சிக் கோட்பாடு, சதிக்கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை உடையவர்கள் உலகம் தட்டையாக இருக்கிறது என்ற நம்பிக்கையை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் இவர்கள் கூறும் எந்தக் கருத்துகளும் அறிவியல் பூர்வமாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு நாசா என்ற அமைப்பு இதுவரை நிலவுக்கு சென்றதே இல்லை. ஏன் மனிதர்கள் எந்த செயற்கைக்கோளையும் விண்வெளிக்கு அனுப்பியதே இல்லை என்று கூறும் பழக்கம் கொண்டவர்கள். அதோடு வானம் என்ற அமைப்பை ஏற்படுத்தியதே இந்த அரசாங்கங்கள்தான். இந்த அரசாங்கள்கள் மனிதர்களை கடவுளிடம் இருந்து தள்ளியே வைத்து இருக்கின்றன. இதனால்தான் உண்மை எதுவும் மனிதர்களுக்கு புலப்படுவதே இல்லை என்பது போன்ற கொடூரமான கேட்பாடுகளை இந்த உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இலுமினாட்டி உண்மையிலேயே இருக்கின்றனர் என்றும் நம்பி வருகின்றனர். இதுபோன்ற கொள்கை உடையவர்களின் பேச்சுகளை மக்களும் நம்பத்தான் செய்கின்றனர். காரணம் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லுவதன் மூலம் இந்த கான்ஸ்பிரைஸி கோட்பாடும் உலக மக்களால் விரும்பப்பட்டு வருகின்றது. இதனால் அவ்வபோது பொதுவெளியில் சிக்கலும் ஏற்படுகின்றன.
கொரோனாவால் கடும் அவதியைச் சந்தித்து இருக்கும் இந்த உலக மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாதவாறு உலகம் முழுவதும் இதுபோன்ற கொள்கைகளை தற்போது கான்ஸ்பிரைஸிகள் பரபரப்பவும் தொடங்கி விட்டனர். இதுகுறித்து தற்போது சில மேற்கு நாடுகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com