பிரியா வாரியரின் புதிய கண்சிமிட்டல் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ரியா வாரியர் நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் ப்ரியாவாரியரின் கண்சிமிட்டல் மற்றும் புருவ நடனம் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. டுவிட்டர் டிரெண்டில் சன்னிலியோன் உள்பட பாலிவுட் பிரபலங்களையும் பின்னுக்கு தள்ளினார் பிரியா வாரியர்
இந்த நிலையில் தற்போது பிரியாவாரியர் நடித்த சாக்லேட் விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ஐபிஎல் பின்னணி இசையுடன் வெளியாகியுள்ள இந்த விளம்பரத்தில் கண்சிமிட்டியபடியே சாக்லேட்டை சுவைக்கும் பிரியாவாரியர், தீவார் என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேசும் ஒரு வசனத்தையும் பேசுகிறார்.
இந்த விளம்பர வீடியோவும், 'ஒரு ஆடார் லவ்' டீசர் வீடியோ போல் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com