ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத ரியல் ஹீரோக்கள்
- IndiaGlitz, [Saturday,March 02 2019]
பாகிஸ்தானில் இருந்து விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் குறித்து நேற்று முழுவதும் கவர் செய்த இந்திய ஊடகங்கள், இந்திய விமானப்படையை சேர்ந்த சித்தார்த் உள்பட ஆறு வீரர்களின் வீரமரணத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் டுவீட்டுகளும் பெரும்பாலும் அபிநந்தன் குறித்தே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த புதன்கிழமை ஸ்ரீநகர் விமான நிலையிலிருந்து எம்ஐ-17 ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த சித்தார்த் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்த விபத்தில் உயிரிழந்த சித்தார்த் உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது இதில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானொர் கலந்துகொண்டனர். இந்த இறுதிச்சடங்கின்போது சித்தார்த் மனைவி ஆர்த்தி சிங், சித்தார்த்தின் ராணுவ உடை அணிந்து தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
சித்தார்த் கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது மீட்புப் பணியின்போது சிறப்பான முறையில் மீட்புப்பணி செய்ததற்காக கடந்த ஜனவரி 26ஆம் தேதி அவர் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபிந்ததனின் வரவுக்காக காலை முதல் காத்திருந்த முன்னணி ஊடகங்கள் சித்தார்த் இறுதிச்சடங்கு செய்தியை பெட்டிச்செய்தியாக கூட பதிவு செய்யவில்லை என்பது பெரும் சோகமே.