டென்னிஸ் சாம்பியனுக்கு 'மாஸ்டர்' விஜய் போஸ்.. விம்பிள்டன் நிர்வாகம் கெளரவம்..!

  • IndiaGlitz, [Monday,July 17 2023]

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் என்பவருக்கு வாழ்த்து கூறும் வகையில் ’மாஸ்டர்’ படத்தில் விஜய் போஸ் போலவே அல்கராஸ் புகைப்படத்தை வெளியிட்டு விம்பிள்டன் நிர்வாகம் கௌரவப்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான அல்கராஸ், ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாடி 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 2023 ஆம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.



இதனை அடுத்து இவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் விம்பிள்டன் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் என்ற அல்கராஸ், புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டி உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரல் ஆக்கி வருகின்றனர். ஒரு தமிழ் படத்தின் போஸ்டரை விம்பிள்டன் சாம்பியனுக்கு கெளரவப்படுத்தும் வகையில் விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.