இராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும்..! உச்சநீதிமன்றம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, ஆண் அதிகாரிகளுக்கு இணையான கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிரான அரசு தரப்பு வாதங்கள், பாரபட்சமானது என்றும் பழமைவாதம் என்றும் கூறிய நீதிமன்றம், இந்த தீர்ப்பை 3 மாதத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு அதிரடி காட்டியுள்ளது.
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும், உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றறவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது, ராணுவத்தில் குறுகிய சேவை ஆணையத்தில், 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் கூட நிரந்திர ஆணையத்தின் விருப்பத்தை கொண்டிருக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout