பிக்பாஸ் வீட்டில் வனிதா எண்ட்ரியா? அச்சத்தில் போட்டியாளர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கடந்த சீசன்களின் போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதா என்ட்ரி ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இது குறித்த போட்டியாளர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா தன் மனதுக்கு தோன்றிய கருத்தை அச்சமின்றி சொல்வார் என்பதோ எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் அவரிடம் குறை இருந்தால் சுட்டிக் காட்டுவார் என்பது தெரிந்ததே.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அடுத்தடுத்த சீசன்களை அவர் விமர்சனம் செய்யும்போது அவர் நேர்மையாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அவர் சொல்லும் முறை வேண்டுமானால் தவறாக இருந்தாலும், அவரது கருத்து நியாயமாகவே இருக்கும் என்பது பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் கடந்த சீசனின் போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி வருகை தந்தார். இந்த நிலையில் இன்று வனிதா வருகை தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அசீம் கூறியபோது ’வனிதாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன், அவர் வந்தால் வீடே கலகலப்பாக இருக்கும்’ என்று கூற அதற்கு அமுதவாணன் அச்சத்துடன் வனிதாவின் வரவை நான் நீங்கள் மட்டும் எதிர்பாருங்கள், எங்களுக்கெல்லாம் வேண்டாம் என்று கூறுகிறார். மேலும் வனிதா வந்தால் நான் ஒளிந்து கொள்வேன் என்றும் அவரிடம் பேசவே மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.