சென்னையின் முக்கிய பதவிக்கு வருவாரா உதயநிதி?

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி கடந்த சில நாட்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து கூறிய முன்னாள் சென்னை மேயரும் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிடுவார் என்பது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்த வதந்தி உண்மையாகுமா? சென்னையின் முக்கிய பதவியான மேயர் பதவியை உதயநிதி கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தைவானில் ஷங்கர் பறக்கவிட்ட 'இந்தியன் 2'

இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று நேற்று ஷங்கர் கூறியுள்ளார்

ரஜினியின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது? ஷங்கர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற பொங்கல் ரிலீஸ் படம்

நேற்று 'ஸ்கெட்ச்' திரைப்படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவுடன் இந்த படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்தவுடன் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம் ரிலீஸ் தேதி

விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'கரு' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டபோதிலும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில காட்சிகள் நீக்கப்பட்டு இலவசமாக திரையிடப்படும் 'வேலைக்காரன்'

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.