இப்படிக்கூட நடக்குமா??? எங்களுக்கு வரியப்போட்டு கொரோனாவிற்கு நிதியை எடுத்துக்கோங்க... வியப்பூட்டும் அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,July 14 2020]

 

கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாடுகளும் இருக்கின்றன. இதுபோன்ற நேரத்தில் மக்களிடம் அதிக வரியை பெற்று நிலைமையை சமாளிக்கவும் ஒரு சில நாடுகளில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உலகில் உள்ள சூப்பர் பணக்காரர்கள் சிலர் தற்போது தனாக முன்வந்து மில்லியனர்களுக்கு அதிக வரியை கணிசமாக நிர்ணயித்து உலக நாடுகள் கொரோனா நெருக்கடிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து உலகின் சில முக்கிய பணக்காரர்கள் இணைந்து பெரும்பாலான நாடுகளின் அரசுகளுக்கு “மனித நேயமிக்க மில்லியனர்கள்” என்ற பெயரில் கடிதத்தை அனுப்பியிருக்கின்றனர். இக்கடிதத்தில் பென் மற்றும் ஜெர்ரி ஐஸ் கிரீம் நிறுவனத்தின் இணைநிறுவனர் ஜெர்ரி கிரீன் ஃபீல்ட், பிரபல திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் காட்டிஸ், திரைப்பட தயாரிப்பாளர் அடிகெய் டிஸ்னி, அமெரிக்க தொழிலதிபர் சிட்னி டோடோல், நியூசிலாந்தின் வணிகர் ஸ்டீபன் போன்றோர் கையெழுத்திட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப் பணக்காரர்கள் இப்படி தாங்களாகவே முன்வந்து மனித நேயமிக்கச் செயலுக்காக வரியை விதிக்குமாறு கேட்டிருப்பது பலரது மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகின் முக்கியமான 80 பணக்காரர்கள் இந்த கடிதத்தைக் குறித்து விருப்பதையும் தெரிவித்து இருக்கின்றனர். வரவிருக்கும் ஜி20 நிதியமைச்சர் மாநாட்டில் இக்கடிதம் வாசிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து தொழிலதிபர் திங்க் டோக்ஸ் பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் இதுதான் நிலைமை என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். நிதி நிலைமையை சமாளிக்க தற்போது ரஷ்ய அரசாங்கம் மில்லியனர்களுக்கு அதிக வரி விதிக்கும் யோசனையில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறது. அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதி வரியை விதிக்கும் செயல்பாடுகளில் இறங்க நினைத்து இருக்கிறது. இப்படி உலகத்தையே கொரோனா வைரஸ் பல நெருக்கடிக்குள் சிக்க வைத்து இருந்தாலும் மனித நேயத்தை நினைவூட்டும் நடவடிக்கைகளும் தொடருவது வரவேற்கத்தக்கது.

More News

இந்த மாதிரி போக்கிரிகளை தண்டிக்க வேண்டும்: நடிகர் பிரசன்னா ஆவேசம்

கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து முருக பக்தர்கள் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம்

ராமர் நேபாளி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது: நேபாளம் பிரதமரின் சர்ச்சை கருத்து

ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி தற்போதுதான் சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளது.

கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் கொரோனா சோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம்