மே 1,2-இல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா...? 

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]


 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.

சட்டமன்றத்தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே-2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத்தொடரந்து மே 1,2-ஆம் தேதிகளில் ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் பரிந்துரை செய்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை பற்றிய தகவல்களை அரசிடம் தெரிவித்துள்ளோம். ஊரடங்கு குறித்த முடிவுகளை அரசே முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. இப்பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர் குழுமமும் இதில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

ஆக்சிஜன் சிலிண்டருக்காக போலீசார் காலில் விழுந்து கதறும் நபரின் வீடியோ… உ.பி.யிலா இப்படி?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை.

கிரிக்கெட் வீரர்களுடன் சாண்டி மாஸ்டர் டான்ஸ்: வைரல் வீடியோ

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

மனைவி, மகனுடன் இயக்குனர் விஜய்: வைரல் புகைப்படங்கள்

அஜித் நடித்த 'கிரீடம்' விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார்.

விரைவில் சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள்: இசையமைப்பாளர் தகவல்!

சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 

2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா? விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ!

2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.