கஸ்தூரி கூறும் தல, தளபதியின் மைனஸ்களை ரசிகர்கள் ஏற்பார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அவ்வப்போது டிரெண்டிங்கில் இருப்பார். சில சமயம் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்யப்படும் கருத்துக்களால் அவர் இக்கட்டான நிலைக்கும் தள்ளப்படுவதுண்டு
இந்த நிலையில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் குறித்து கஸ்தூரி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ப்ளஸ்கள் என அவர் கூறியது எப்போதும் இளமையுடன் இருப்பது, நல்ல டான்சர், அசத்தலான நடிப்பு மற்றும் வெறித்தனமான ரசிகர்களை வைத்திருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய்யின் மைனஸ் ஆக தனது ரசிகர்கள் திருப்தி அடையும் வகையில் மட்டும் திரைக்கதையை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்தின் ப்ளஸ்களாக நல்ல அழகு, சுயமாக முன்னேறியவர், மனித நேயத்துடன் இருப்பவர், மற்றும் சக்திவாய்ந்த ரசிகர்கள் கூட்டத்தை உடையவர். இவருடைய மைனஸ் என்று பார்த்தால் ஒரே இயக்குனர், ஒரே தயாரிப்பாளர், ஒரே மாதிரியான கதையில் நடிப்பது ஆகியவற்றை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். தல, தளபதி குறித்து கஸ்தூரி கூறிய ப்ளஸ்களை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் மைனஸ்களை ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments