திருநங்கை கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

தமிழில் தற்போது திருநங்கை கேரக்டரில் நடிக்க பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் திருநங்கை கேரக்டரில் நடித்த படம் ஒன்று தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருநங்கை கேரக்டரில் நடிகர்களே நடித்து வரும் நிலையில் இமேஜ் குறித்து சற்றும் கவலைப்படாமல் நடிகை ஸ்ரீபல்லவி, 'தாதா 87' என்ற படத்தில் திருநங்கையாக துணிச்சலாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஸ்ரீபல்லவியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீபல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்று இயக்குனர் விஜய்ஸ்ரீ இந்த படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருந்த நிலையில் இந்த படம் தேசிய விருது பெற்றால் நிச்சயம் அது வரவேற்கத்தக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கப்பட்டுள்ள நிலையில்

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார்

ரஜினி-விக்னேஷ் சிவன் சந்திப்பு! அடுத்த படத்தை இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

கவுதம் மேனனுடன் இணைந்த அனிருத்!

இதுவரை கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.

என் வாய்தான் என் எதிரி: லதா விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி

எம்ஜிஆர்-லதா குறித்து நடிகை கஸ்தூரி பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பது தெரிந்ததே.