நடிகர் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை… ஆஸ்கர் விருதுக்கு ஆபத்தா?
Send us your feedback to audioarticles@vaarta.com
94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபல அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அவரது கன்னத்தில் அறைந்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆஸ்கர் குழு அவர் மீது ஒழுங்கு விசாரணை துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் கிறிஸ் ராக்கை அறைந்த பின்பு நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுமாறு வில் ஸ்மித்திடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் ஆஸ்கர் விருது குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் பிரபல நடிகர் வில் ஸ்மித் “கிங் ரிச்சட்“ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் பெறும் முதல் ஆஸ்கர் விருது இத என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விருதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாகவே மேடையில் தொகுப்பாளராக இருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் குறித்து பேசியிருந்தார். அதாவது ஜிஐஜேன் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்த நாயகி தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு மொட்டைத் தலையுடன் நடித்திருப்பார். அவரைப் போலவே ஜடா பிங்கெட்டு வந்திருப்பதாக கிறிஸ் ராக் நகைச்சுவையாகத் தெரிவித்தார். இதை ஜடா விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வில் ஸ்மித் திடீரென மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்து விட்டு, மீண்டும் தனது இருக்கைக்கு வந்தபின்பும் சில தகாத வார்த்தைகளில் திட்டினார்.
இந்தச் சம்பவத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் இருந்தவரும் நிலையில் ஆஸ்கர் விருதுகுழு வில் ஸ்மித் மீது ஒழுங்கு விசாரணையைத் துவங்கியிருப்பதாகவும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தலைமை குழு உறுப்பினர்களின் சந்திப்புக்குப் பிறகு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து வில் ஸ்மித்தின் ஆஸ்கர் விருதுக்கு ஆபத்து வருமா? என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com