மீண்டும் நயன்தாரா புரபோஸ் செய்தால்? சிம்புவின் அசத்தல் பதில்

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு மற்றும் நயன்தாரா காதலித்ததாகவும் அதன் பின்னர் இருவரும் ஒரு சில காரணத்தால் பிரேக்-கப் ஆகி பிரிந்து விட்டதாகவும் கோலிவுட் திரையுலகில் செய்திகள் வலம் வந்தது.

இந்த நிலையில் இருவரும் தற்போது அவரவர் படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் சிம்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒருவேளை மீண்டும் நயன்தாரா உங்களிடம் புரபோஸ் செய்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு சிம்பு ’இப்போது நாங்கள் ஜஸ்ட் நண்பர்கள் மட்டுமே, வேறு ஒன்றும் எங்களுக்குள் இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் இப்பொழுது இருவரும் நேரில் பார்த்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு ’ஹலோ’ சொல்லிக் கொள்வோம் என்றும் வேறு ஒன்றும் எங்களுக்கு இடையே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா தான் முதல் காதலியா? என்று கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லை நான் அதற்கு முன்னரே பல காதல்களை பார்த்து உள்ளேன் என்று கூறியுள்ளார் சிம்புவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.