விஜய் தந்தையுடன் ரஜினி சந்திப்பா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனியார் கல்லூரி ஒன்றில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கவுள்ளார். அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க சற்றுமுன் வந்த ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் ரஜினிகாந்த், எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மாஸ் பேச்சு இருக்கும் என்று அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதே விழாவில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். எனவே இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கூகுளில் தேடினாலும் கிடைக்காத ஹேர்ஸ்டைல்: பாலாவிடம் சிக்கிய துருவ்?

இயக்குனர் பாலா படம் என்றால் ஹீரோக்களின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். கூகுளில் தேடினால் கூட இதுபோன்ற ஒரு ஹேர்ஸ்டைலை கண்டுபிடிக்க முடியாதவாறு பாலா தனது ஹீரோக்களின் ஹேர்ஸ்டைலை மாற்றிவிடுவார்.

'கோலி சோடா 2' படத்தை வெளியிடும் நிறுவனம் எது தெரியுமா?

விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது கோலிசோடா 2' என்ற படத்தை விஜய்மில்டன் இயக்கி முடித்துள்ளார்.

ஸ்ரீதேவி மரணம் அடைந்த அன்று என்ன நடந்தது? போனிகபூரின் நெருங்கிய நண்பரின் தகவல்

கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் உள்ள ஓட்டலின் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். அவர் மதுபோதையில் எதிர்பாராமல் குளியல் தொட்டியில் விழுந்ததால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

'நீயா 2' படத்தில் பாம்பு வேடத்தில் நடிக்கும் நடிகை யார்?

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படமான “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம்.

சன்னிலியோன் கணவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது அவரது கணவர் டேனியல் வெபர் என்பவருடன் வசித்து வருகிறார்