செப். 11 க்குள் புலி சென்சார். 'யூ' சர்டிபிகேட் கிடைக்குமா?

  • IndiaGlitz, [Monday,September 07 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட ஆர்வலர்கள் அனைவருமே அக்டோபர் 1ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், இந்தப் படம் வரும் செப்டம்பர் 10 அல்லது 11 ஆம் தேதி சென்சார் பார்வைக்கு அனுப்பப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. .

விஜய்யின் படங்களுக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் அதிகம் என்பதால் அவரது பெரும்பாலான படங்கள் 'யூ'சர்டிபிகேட் கிடைக்கும் வகையில்தான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.'புலி' படமும் 'யூ' சர்டிபிகேட் கிடைக்கும் வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். .

இந்த படத்தை பொறுத்தவரையில் மன்னர் காலத்து கதை என்பதால் 'யூ'சர்டிபிகேட் கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் 'புலி' படத்தின் பட்ஜெட் இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட மிக அதிகம் என்பதால், கண்டிப்பாக தமிழக அரசின் வரிவிலக்கு இந்த படத்திற்கு ஒரு பெரும் ஒத்துழைப்பாக இருக்கும். எனவே இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

கேன்சர் சிறுமிக்கு ரூ.25 லட்சம் கொடுத்து உதவிய அஜித்?

அஜீத் ஒரு நல்ல நடிகராக மட்டுமின்றி பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறிந்திருக்கின்றோம்....

மார்க்கண்டேய நடிகர் சூர்யாவுக்கு இன்று வயது 18

தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் நடிகர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பழம்பெரும் நடிகர் சிவகுமார். எந்த விதமான கிசுகிசுகளிலும் சிக்காமல் திரையுலகில் கண்ணியமாக வாழ்ந்த ஒருசில நடிகர்களில் ஒருவர்.....

சூர்யா படங்களின் '100 நாட்கள்' திட்டம்

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது......

'த்ரிஷ்யம்' இயக்குனர் ஜீத்துஜோசப்பின் அடுத்த பட ரிலீஸ் தேதி

ஜீத்துஜோசப் இயக்கிய மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம்' மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது....

கமல், அரவிந்தசாமியை அடுத்து சிம்புவை டார்கெட் செய்த குஷ்பு

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமாக இவரை ரசித்தனர்.....