தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?
- IndiaGlitz, [Thursday,December 31 2020]
சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் சிம்பு நடித்து இயக்கிய ’வல்லவன்’ திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இந்த நிலையில் ‘கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’, உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, நயன் தாரா மூன்றாவது முறையாக இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.