லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: இப்போதாவது ஒப்புக்கொள்வார்களா?

  • IndiaGlitz, [Friday,March 31 2017]

சூப்பர் ஸ்டார் பட்டத்தை அஜித், விஜய் கைப்பற்ற நினைத்தாலே எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் கைப்பற்றினால் சும்மா இருப்பார்களா? சமீபத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் அவரை என்ன பாடு படுத்தியது என்பதை பார்த்தோம்
ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் நயன்தாராவை புகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் யாரிடம் இருந்தும் எந்தவிதமான எதிர்ப்பும் வெளிவரவில்லை என்பதே ஒரு ஆச்சரியம்தான். லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா தகுதியானவர்தானா? என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்ட ஒருசிலருக்கு இன்று அந்த சந்தேகம் தீர்ந்திருக்கும்
ஆம், இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய், போன்ற மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே பெரிய பெரிய கட்-அவுட்டுக்களை ரசிகர்கள் வைத்து அழகு பார்த்து வந்த நிலையில் முதல்முறையாக நயன்தாராவுக்கு சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் 'டோரா' படத்தின் மிகபெரிய கட்-அவுட்டை வைத்து நயன்தாராவின் ரசிகர்கள் அசத்தியுள்ளனர். இதன்மூலம் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர்தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

More News

மலேசிய சுற்றுலா தூதர் பதவி உண்மையா? ரஜினி விளக்கம்

மலேசிய அதிபர் நஜீப் ரசாக் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதை பார்த்தோம்.

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்

ஐந்து நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதம்பர் நஜீப் ரசாக் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

நானும் கார்த்தியும் ரூ.10 கோடி நிதியளிப்போம். அடிக்கல் நாட்டு விழாவில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று தொடங்கியது.

தயாரிப்பாளராக மாறினார் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் நாயகி எமிஜாக்சன் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தயாரிக்கவிருப்பது திரைப்படம் அல்ல என்பதும், அது ஒரு குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது...