அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா கேஎஸ் ரவிக்குமார்? அவரே அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வில்லன் மற்றும் நாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 30% இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அஜீத் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் அடுத்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த கேஎஸ் ரவிக்குமார் ’தன்னுடைய பெயரில் டுவிட்டர் பக்கம் ஏதுமில்லை என்றும் தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலியான பக்கம் என்றும் அதில் உள்ள தகவல்களும் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து அஜித் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்க உள்ளார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே அஜித் நடித்த ’வில்லன்’ மற்றும் ’வரலாறு’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள கே.எஸ்.ரவிகுமார், விரைவில் அஜித் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

விரைவில் வெளியாகவுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்ச்சி பாடல்!

திரையுலகில் பிஸியாக இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அவ்வப்போது தனி பாடல்களையும் கம்போஸ் செய்து வெளியிடுவார்

மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது

உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.7,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்..! மத்திய பட்ஜெட்.

தமிழக இரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்கிற துரோகம் என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

உலகக்கோப்பையை வென்ற வங்கதேச அணிக்கு ஐசிசி கண்டனம்

நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

மன அழுத்தம்.. 29 பேரை கொன்று பலரை பணயக்கைதியாக வைத்திருந்த, ஒரு ராணுவ வீரர்..!

தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.