சிவகார்த்திகேயன் பட நாயகியாகும் தேசிய விருது பெற்ற இயக்குனரின் மகள்!

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் வரும் மார்ச் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி சிவகார்த்திகேயன் -மித்ரன் இணையும் இந்த படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

கல்யாணி ஏற்கனவே 'வான்' என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் அவருடைய இரண்டாவது தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'கனா' நாயகனுடன் கைகோர்க்கும் பிரபல நடிகரின் மகள்!

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தர்ஷன், அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள்: 25 வயது பெண்ணுக்கு சுகப்பிரசவம்

ஈராக் நாட்டில் 25 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

'மங்காத்தா 2' இயக்க பயமாக இருக்கின்றது! வெங்கட்பிரபு

தல அஜித்தின் 50வது படமான 'மங்காத்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை வசூல் செய்தது. தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் தொடர்ந்து வருவதால் 'மங்காத்தா 2' படத்தை

சிறுவனின் செயலை காப்பியடிக்கலாமா? ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்த கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, 'ரஜினியை மறைமுகமாக தாக்கிய அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.

கோதாவில் இறங்கிவிட்டு பின்வாங்கலாமா? ரஜினிக்கு கமல் மறைமுக தாக்குதல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு