பிரபாஸ்-மகேஷ்பாபுவை அடுத்து தமிழுக்கு வரும் ஜூனியர் என்.டி.ஆர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்தியாவிலேயே கோலிவுட் திரையுலகம்தான் செல்வ செழிப்பில் உள்ளது. உலக அளவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்கெட் இருப்பதால் பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்கள் முதல் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் வரை மிக அதிக வசூலை பெற்று பல சாதனைகளை தமிழ் திரைப்படங்கள் வருகிறது. எனவே தமிழ் திரையுலகிற்கு நாளுக்கு நாள் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் தமிழ் ரசிகர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபாஸ் தனது 'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடித்துவிட்ட நிலையில் சமீபத்தில் மகேஷ்பாபுவும், தனது ஸ்ரீமந்துடு படத்தை தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் அதே தேதியில் ரிலீஸ் செய்து நல்ல வெற்றியையும் பெற்றார். பிரபாஸ், மகேஷ்பாபுவை அடுத்து தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் பார்வையும் தமிழக ரசிகர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிடும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் ஒரு ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதால் தமிழ் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என சுகுமார் கூறியுள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரு படத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நம்மூர் விஜய், அஜீத், சூர்யா, ஆகியோர் தெலுங்கில் கலக்கி வரும் நிலையில் தெலுங்கு நடிகர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர் என்றே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com