அவரைப் போலவே விமானி ஆவேன்… விபத்தில் இறந்த வீரரின் 12 வயது மகள் உருக்கம்!
- IndiaGlitz, [Wednesday,December 15 2021]
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே கடந்த 8 ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இராணுவ ஹெலிகாப்டரில் சிக்கி உயிரிழந்தவர்களுள் ஒருவரான விங் கேப்டன் பிருத்வி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆராத்யா செய்தியாளர்களிடம் உருக்கமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது 7 ஆம் வகுப்பு படித்துவரும் ஆராத்யா தனது தந்தையைப் போலவே விமானி ஆவேன் என்றும் எனது தந்தை எப்போதும் மதிப்பெண்ணை கவனத்தில் கொள்ளாமல் படிப்பில் கவனத்தைச் செலுத்தச் சொல்லுவார் என்றும் கூறியுள்ளார்.
மேம் அவர் என்னுடைய இலக்கில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அதனால் எனது அப்பா பிருத்வி சிங் சவுகானைப் போலவே நானும் ஒரு சிறந்த விமானி ஆவேன் என்று சிறுமி ஆராத்யா தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்திற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பிருத்வி சிங் சவுகானிற்கு ஆராத்யா(12) என்ற மகளும் அவிராஜ் (7) என்ற மகனும் இருக்கின்றனர். முன்னதாக இராணுவ மரியாதையுடன் இவரது உடலுக்கு ஆராத்யா மற்றும் அவிராஜ் இருவரும் சேர்ந்து தீ மூட்டியதும் குறிப்பிடத்தக்கது.