ஜெயலலிதாவின் சொத்துக்கள் தெலுங்கானா அரசுக்கு செல்லுமா? புதிய வழக்கு

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவருடைய ரத்த சொந்தங்களும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான ஐதராபாத்தில் உள்ள சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஐதராபாத்தில் உள்ள பேட்பஷிராபாத் என்ற பகுதியில் ஜிடி மெட்லா, ஹொம்பள்ளி ஆகிய இடங்களில் 4 ஏக்கர் மற்றும் 7 ஏக்கர் பரப்பளவில் ஜெ.ஜெ.கார்டன் என்ற பெயரில் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தத்தில் உள்ள உறவுப்பெண் ஒருவரின் பெயருக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளதாக அந்த பகுதியின் சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியிலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை அவர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வீடும், ஜெ.ஜெ.கார்டன் சொத்துக்களையும் தெலுங்கானா அரசே ஏற்று நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கரிப் கைடு அமைப்பின் தலைவர் பார்கவி என்பவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

த்ரிஷ்யம் பாணியில் நடந்த ஒரு நிஜ கொலை. அதிர்ச்சி தகவல்

மோகன்லால் நடிப்பில் ஜீத்துஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த பிணத்தை கட்டுமானப்பணி நடைபெற்று கொண்டிருந்த காவல்நிலையத்தில் புதைத்துவிடுவார்.

அஜித்தை பாராட்டிய ஐரோப்பிய ஸ்டண்ட்மேன்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் நடித்து வரும் தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரகளை திடீரென சந்தித்துள்ளார்.

கூகுளின் டாப்-10ல் இடம்பிடித்த ரஜினியின் 'கபாலி'

2016ஆம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் கூகுள் தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

நான் காணாமல் போகவில்லை - ஜெ.உறவினர் தீபா

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்