சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு தடையா?

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் முதல் போட்டி வரும் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் நேற்று முன் தினம் முதல் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஆளும்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த் நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என ஐபிஎல் நிர்வாகத்துக்கு அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டாக  கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஐபிஎல் போட்டியை யாரும் நேரில் சென்று பார்க்காமல் இருந்தால் காவிரி பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்க்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

எனவே ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் என்றும், அப்படியே நடத்தினாலும் யாரும் பார்க்க செல்லவேண்டாம் என்றும் கூறப்பட்டு வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சென்னை ஐபிஎல் போட்டியை ஐபிஎல் நிர்வாகம் ரத்து செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவே இல்லை, எல்லாம் கிராபிக்ஸ்: வைகோ அதிர்ச்சி தகவல்

கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதில் சுட்டுக்கொல்லப்பட்ட மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அனுசரிக்கப்பட்டது

எல்லா புகழும் சூர்யாவுக்கே: பிரபல இயக்குனரின் டுவீட்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

நோ பாலில் விக்கெட் எடுத்து கொண்டாடுபவர்: அப்ரிடிக்கு காம்பீர் பதிலடி

காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் பதிவு செய்த அஃபரிடிக்கு இந்திய அணி வீரர் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

காமெடியில் முடிந்த யுவன்சங்கர் ராஜாவின் கார் திருட்டு விவகாரம்

பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவின் விலைமதிப்புள்ள ஆடி கார் நேற்று திருடு போனது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண்: அமெரிக்காவில் அதிர்ச்சி

உலகின் நம்பர் ஒன் ஆக இருக்கும் யூடியூப் இணையதளத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மர்மபெண் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக மூன்று பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.