சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு தடையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
11வது ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் முதல் போட்டி வரும் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் நேற்று முன் தினம் முதல் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஆளும்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த் நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என ஐபிஎல் நிர்வாகத்துக்கு அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஐபிஎல் போட்டியை யாரும் நேரில் சென்று பார்க்காமல் இருந்தால் காவிரி பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்க்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் என்றும், அப்படியே நடத்தினாலும் யாரும் பார்க்க செல்லவேண்டாம் என்றும் கூறப்பட்டு வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சென்னை ஐபிஎல் போட்டியை ஐபிஎல் நிர்வாகம் ரத்து செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com