கர்ப்பத்தில் இருக்கும் சிசு கூட 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடுதா? வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் சென்டிமென்ட் படம் என பொதுவான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற பாடலுக்கு தியேட்டரில் எழுந்து ஆடாத நபரே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் ‘ரஞ்சிதமே’ பாடல் ஒலிக்கும்போது தன்னுடைய வயிற்றில் இருக்கும் சிசு கூட தன்னை எட்டி உதைப்பதாக கர்ப்பிணி பெண் ஒருவர் கூறியிருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மற்ற எந்த பாடல்களுக்கும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தை ரியாக்ட் செய்ததில்லை என்றும் ரஞ்சிதமே பாடல் போட்டால் மட்டுமே குழந்தை எட்டி உதைப்பதாக அந்த பெண் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள இசையமைப்பாளர் தமன், ‘இது ஒரு தெய்வீக உணர்வு, என்ன ஒரு க்யூட்’ என உருகியுள்ளார். ஏற்கனவே பல குழந்தைகள் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு தியேட்டரில் டான்ஸ் ஆடும் வீடியோவை இசையமைப்பாளர் தமன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Such a divine feel How Cute this is
— thaman S (@MusicThaman) January 14, 2023
made my day 🥹❤️ #Ranjithame 💃🤍🍭 https://t.co/3eRNztekDP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com