தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத்தயார். ராகவா லாரன்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும் ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் லாரன்ஸ். போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் ஆகியவற்றை தனது செலவில் கொடுத்து போராட்டம் வெற்றிகரமாக முடிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். அதே நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியபோது மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியவரும் கூட.
மேலும் சமீபத்தில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய கோரியும், போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதியும் கோரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டதை அடுத்து சற்றுமுன் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத்தயார் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பார்கள் என்றும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வெற்றி விழாவை விரைவில் கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments