மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. ஒருவழியாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது மெளனத்தை கலைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் 15 தினங்களுக்குள் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

இன்று பதவியேற்றவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும்போது, துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தமிழக மக்கள் கவலையுடன் பார்த்து கொண்டுதான் இருந்தனர். முதலமைச்சர் பழனிச்சாமிதான் என்றாலும் அவர் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுவார் என்பதையும், சசிகலாவின் உறவினர்களின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகத்தான் கூறப்படுகிறது. ஏனெனில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்திற்கு வராமல் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 124 பேர்களில் 8 பேர்களை ஓபிஎஸ் தன்பக்கம் இழுப்பது பெரிய விஷயமில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் கமிஷன் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பேற்றது குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் இன்றைய ஆட்சிக்கு பாதகம்தான். தமிழகத்தில் முதன்முறையாக மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறான ஒரு ஆட்சி அமைந்துள்ளதாகவே கூறப்பட்டு வரும் நிலையில், மக்களின் நம்பிக்கையை பெறவும் அவர்களின் மனதில் இடம்பெறவும் புதிய அரசு என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்துதான் இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

More News

2016ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளிவிபர புத்தகம். ஏவிஎம் சரவணன் வெளியிட்டார்

2016 ஆம் ஆண்டிற்கான திரைப்பட புள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தை திரு: ஏவிஎம் சரவணன் அவர்கள் வெளியிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அமைச்சரவை பட்டியல்:

எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

சசிகலாவின் சபதம் பாஞ்சாலி சபத்திற்கு இணையானது. ஓ.எஸ்.மணியன்

கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை செல்ல நேரிட்டது.

பதவியேற்பை தடுத்து நிறுத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு. ஜெ. வழக்கறிஞர் மனுதாக்கல்

அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரின் அழைப்பை ஏற்று இன்னும் சற்று நேரத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் இந்த பதவியேற்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.