வெஸ்டன் கழிப்பறையை பயன்படுத்தினால் கொரோனா வருமா??? பீதியைக் கிளப்பும் புதுத்தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான ஒரு புதிய ஆய்வு முடிவு வெளியிடப் பட்டு இருக்கிறது. அதில் நாம் பயன்படுத்தும் வெஸ்டன் முறையிலான கழிப்பறைகள் மூலம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது. சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்தத் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுப்புது அறிகுறிகள், மரபணு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து தற்போது பரவும் விதத்தையும் குறித்து முன்னெச்சரிக்கைக்காக பல ஆய்வுகள் நடத்தப்படு கின்றன. அப்படி (Physics of Fluids) என்ற இதழ் கணினி மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட புது ஆய்வில் வெஸ்டன் கழிப்பறைகள் மூலம் கொரோனா பரவும் என்ற தகவலை யாங்ஜோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா பாதித்த நபர்களின் செரிமாண மண்டலத்தில் உயிர்வாழும் கொரோனா வைரஸ் அவர் கழிக்கும் மலத்தின் வழியாக பரவலாம் எனவும் கூறப்படுகிறது. அப்படி வெளியாகும் கழிவுகளை நாம் பிளஷ் செய்யும் போது நீர் கழிவறையில் கொப்பளிக்கும். அப்படி கொப்பளிக்கும்போது மலத்தில் இருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் காற்றில் வழியாக வைரஸ்கள் எகிறி பக்கத்தில் இருக்கும் சுவரிலும் ஒட்டிக் கொள்ளலாம். சுவரில் இருக்கும் வைரஸ்களை ஒருவேளை நாம் கையை வைத்து தொட்டு விடவும் செய்யலாம். அல்லது காற்று வழியாக பரவும் வைரஸை நாம் சுவாசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே வெஸ்டன் கழிப்பறைகள் கொரோனா விஷயத்தில் பாதுகாப்பு அற்றவை என்றம் அதைப் பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நாம் பயன்படுத்தும் வெஸ்டன் முறையிலான கழிப்பறைகளில் மட்டுமே இப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மலம் கழித்தப் பின்பு அதன் மூடியை மூடிவிட்டு பின்னர் பிளஷ் செய்யுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். பொதுவாகவே கழிப்பறைகளை கிருமிநாசிகளைக் கொண்டு முறையான சுத்தத்தோடு பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப் படுகிறது. இந்தத் தகவல் வெளியான பின்பு நிம்மதியாக உபாதைகளை கூட கழிக்க முடியாது போல என்று சிலர் வெறுப்பை தெரிவித்தும் வருகின்றனர்.