100வது நாளில் நிர்வாண போராட்டம்: டெல்லியில் எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 பென்சன், நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 56வது நாளை அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. குறைந்தபட்சம் மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசக்கூட இல்லை. இந்த நிலையில் இதே ரீதியில் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தால் 100வது நாளில் நிர்வாண போராட்டம் நடத்தவுள்ளதாக அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார். ஏற்கனவே முதல்கட்ட போராட்டத்தின்போது 41வது நாளில் விவசாயிகள் நிர்வாணமாக ஓடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அய்யாக்கண்ணு மேலும் உறுதியுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments