பாக்கெட் பாக்கெட்டாக வழங்கப்படும் ஆணுறை… ஒலிம்பிக் போட்டியில் இப்படியொரு சர்ச்சையா?

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

வரும் ஜுலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகளுக்கு இடையே தடகள வீரர்களுக்கு 1.5 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட இருப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அந்த ஆணுறைகள் வழங்கப்படுமா? அல்லது கொரோனா காரணமாக தடைச் செய்யப்படுமா? எனச் சில பத்திரிக்கைகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகமான ரசிகர்களையும் பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளுக்கு நடுவே பங்கேற்க வரும் அனைத்து வீரர்களுக்கும் கடந்த 1988 ஆம் ஆண்டு முதலே கட்டுக் கட்டாக காண்டம் வழங்கப்பட்டு வருகிறதாம். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் நிபுணர்கள் சிலர் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு போட்டிகளின்போதும் வீரர்களுக்கு காண்டம்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் தடகள வீரர்கள் இயல்பிலேயே வலிமையாக இருப்பார்கள். அதனால் அவர்களது உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கின்றன. கூடவே சில தடகள வீரர்கள் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக உடலுறவில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அவசியம். அதனால் போட்டிக்கு வரும்போதே அனைத்து வீரர்களுக்கும் காண்டம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. அதாவது பெய்ஜிங்கிற்கு வந்த தடகள வீரர்கள் அங்குள்ள 400 அறை வில்லாக்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு 4 லட்சம் வரை காண்டம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4 லட்சத்து 50 ஆயிரம் காண்டம்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டின்போது வெறும் 2 ஆயிரம் வீரர்களே கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் காண்டம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அப்படியென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 55 காண்டம்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற காண்டம்கள் வழங்கப்பட மாட்டாது என்பதையும் போட்டிக்குழு தெரிவித்து இருக்கிறது. மேலும் பார் போன்ற இடங்களுக்குச் சென்று வீரர்கள் மது அருந்துவதைத் தவிர்ப்பதற்காக தங்கும் அறைகளிலேயே மது அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இச்சை ஆசைகள், குவியும் ஆபாச பேச்சுக்கள்....! கிளப்ஹவுசுக்கு என்னதான் ஆச்சு....!

கிளப் ஹவுஸ் என்ற செயலியை பலரும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள்.

தனுஷ் படத்தில் நடிக்கும் மூன்று பிரபல ஹீரோயின்கள் இவர்கள் தானா?

தனுஷ் நடிக்கவிருக்கும் 'D44' என்ற திரைப்படத்தில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் இந்த நிலையில் தற்போது அவர்கள் யார் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் புதிய டைட்டில் இதுதானா? 

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் 'நானே வருவேன்' என்று உறுதி செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் விஜய் டிவி சீரியல் நடிகை!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரு வயது குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது