கமல்ஹாசனின் அரசியல் கட்சியில் பிக்பாஸ் ஆரி? 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும், பிக்பாஸ் போட்டியில் டைட்டில் வின்னராக ஆரியை தவிர வேறு யாராவது தேர்வு செய்யப்பட்டால் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்புமென்றும், ஆரி தான் டைட்டில் வின்னர் என்பதை இப்போதே மக்கள் முடிவு செய்து விட்டார்கள் போல்தான் நெட்டிசன்களின் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் பயப்படாமல் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களின் குறைகளைக் கூறி வருகிறார் ஆரி என்றும் அர்ச்சனா போல் தங்களுக்கு வேண்டியவர்களின் குறைகளை மறைத்து மற்றவர்களின் குறைகளை கூறாமல் அனைத்து போட்டியாளர்களின் குறைகளை பாரபட்சமின்றி கூறுவதோடு, அவர்களுடைய நிறைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டி வருகிறார் என்றும் பெண்களை மதிக்க தெரிந்தவர் என்றும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்கிறார் என்றும் அவரைப் பற்றிய புகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் தன்னுடன் வாதத்தில் ஈடுபடுவோரிடம் சரியான பாயிண்ட்ஸ்களை முன்வைத்து அவர்களின் வாயை அடைப்பது மட்டுமின்றி அவரது வாக்குவாதம் எப்போதும் நேர்மையாக இருப்பதாக பல முறை கமல்ஹாசனே பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற போது திடீரென ‘ஆரி... ஆரி.. என்று மக்கள் கோஷம்போட்டதையும் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று கோஷம் கோஷம்போட்டதையும் பார்த்த கமல்ஹாசனே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஆரியை கமல்ஹாசன் தனது கட்சியில் சேர்த்து கொள்வார் என்றும் அதுமட்டுமின்றி அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் ஆரியின் ஆர்மியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பிக்பாஸ் முதல் சீசனில் ரன்னராக வந்த சினேகன் கமல்ஹாசன் கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே சமூக சேவையில் விருப்பமுள்ளவர் மற்றும் நேர்மையானவர் என்று மக்கள் மத்தியில் பேர் எடுத்த ஆரியை கமல்ஹாசன் தனது அரசியல் கட்சிக்காக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இதுதான் உங்ககிட்ட இருக்குற பெரிய பிரச்சனை: ரம்யாவின் வாயை அடைத்த ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக சூப்பராக விளையாடி வரும் ஆரிக்கு ஈடு இணை கொடுக்க முடியாத போட்டியாளர்கள் அவரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து எதிர்க்கும் பாணியை

கொரோனா தடுப்பூசிக்கே பங்கம்… Google play store இல் உலவும் போலி செயலி!!!

அவசரக்கால பயன்பாட்டுக்காக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பணியில் இருந்த போலீசுக்கே சரமாரி கத்திக்குத்து? அதிர்ச்சி வீடியோ!!!

டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை குற்றவாளியான ஒரு நபர் சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'D43' படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்' மற்றும் ஒரு பாலிவுட் படம்

100% இருக்கைகள் அனுமதி ரத்தாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில்