வாங்க நாம பிக்பாஸ்க்கு போவோம். தமிழ் ஹீரோவை அழைக்கும் பிரேம்ஜி அமரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த சீசன்களில் உள்ள விறுவிறுப்பு இந்த சீசனில் குறைவு என்றே பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. திடீரென பொங்கி எழும் போட்டியாளர்கள் அடுத்த நிமிடமே காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு புஸ்வானம் ஆகி விடுவது பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சுவராசியமான போட்டியாளர் சுரேஷூம் வெளியே அனுப்பப்பட்டு விட்டதால் இருக்கின்ற போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சியை சுவராசியமாக கொண்டு செல்வது பிக்பாஸ் நிர்வாகத்தினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து திரையுலக பிரமுகர்கள் அவ்வப்போது தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ஹீரோ பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள், அவர்களால் ஒரு பிரயோஜனும் இல்லை என்று கூறியுள்ளார்
இதற்கு ரிப்ளை செய்துள்ள நடிகர் பிரேம்ஜி அமரன், ‘நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இருவரின் உரையாடலுக்கு பதிலளித்துள்ள ரசிகர்கள் ’நீங்கள் இரண்டு பேரும் போனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாகவும் ரியலாகவும் இருக்கும் என்றும் தற்போது சீரியல் மாதிரி ஓவர் ஆக்டிங் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளனர்
Bro shall we both go in ?
— PREMGI (@Premgiamaren) November 25, 2020
If you ok I am ok ??
— PREMGI (@Premgiamaren) November 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments