தள்ளிப் போகிறதா அனுஷ்காவின் ருத்ரம்மாதேவி?
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் அனுஷ்கா நடித்த சரித்திர திரைப்படமான 'பாகுபலி' படத்தின் பிரமிப்பே இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில் அனுஷ்காவின் மற்றொரு சரித்திரப் படமான 'ருத்ரம்மாதேவி' வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 'பாகுபலி' படத்தை தமிழில் ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி விஷாலின் 'பாயும் புலி' மற்றும் சவாலே சமாளி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி விஜய்யின் 'புலி' வெளிவரவுள்ளதால் ருத்ரம்மாதேவி படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 11ஆம் தேதி அல்லது அக்டோபர் மாதத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் குணசேகர் தயாரித்து பிரமாண்டமாக இயக்கியுள்ள இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, அல்லு அர்ஜூன், ராணா டக்குபாய், பிரகாஷ்ராஜ், சுமன், நித்ய மேனன், கேதரின் தெரசா, மதுமிதா, பிரம்மானந்தம், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அஜயனன் வின்செண்ட் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், உருது என பல மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout