'ஆண் தேவதை' ரிலீசில் திடீர் சிக்கல்? நாளை வெளிவருமா?

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆண் தேவதை'. நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினர் கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன்களால் படும் துன்பங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டிருக்கும் இந்த படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டு நல்ல பாராட்டையும் பெற்றதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 'ஆண் தேவதை' பட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில் ரூ22 லட்சத்தை திருப்பி தராததால் இந்த படத்துக்கு தடை கோரி நிஜாம் மொய்தீன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் 'ஆண் தேவதை' படத்தை நாளை வெளியிடக் கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி நாளை இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இன்னொரு திரைப்படமான 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற திரைப்படம் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் நாளை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சீதக்காதி' சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் இன்னொரு திரைப்படமான 'சீதக்காதி' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

18 வயது இளம்பெண் மீது காதல் கொண்டாரா வைரமுத்து? சின்மயி அதிர்ச்சி டுவீட்

பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளம் மூலம் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி

கற்பழித்தார், என் அப்பாவை கொலை செய்தார்: சல்மான்கான் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். தனுஸ்ரீதத்தா, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பலர்,

தம்மாதுண்டு 'ஆங்கர்' தாண்டா அவ்வளவு பெரிய கப்பலை நிறுத்துது: 'வடசென்னை' புதிய டீசர் விமர்சனம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை'

கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த மடோனா செபாஸ்டியன்

தளபதி விஜய்யின் 'சர்கார்' மற்றும் புரட்சி தளபதி விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் நாயகியான கீர்த்திசுரேஷ், தமிழின் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில்