பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது வைல்ட் கார்ட் போட்டியாளரா?
- IndiaGlitz, [Saturday,December 28 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் விஷால், மஞ்சரி, ஜெப்ரி, ராணவ், அன்சிதா, ஜாக்லின், பவித்ரா ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். இதில் மஞ்சரி மற்றும் அன்சிதா, ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும், இவர்களில் ஒருவருக்கு இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
குறிப்பாக, மஞ்சரி இந்த வாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் ஆரம்பித்து 28வது நாளில் wildcard போட்டியாளராக வந்த மஞ்சரி இதுவரை 56 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், அவர் வெளியேற்றப்படுவாரா இல்லையா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒருவேளை மஞ்சரி இந்த வாரம் டபுள் எவிக்சன் இருந்தால் அன்சிதாவும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.