ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூணாறு, திருப்பதி திருமலை உள்ளிட்ட பகுதியில் காட்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா வேல்டு சிட்டியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா சிட்டியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு உள்ள ஐடி நிறுவனங்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனித நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் உள்ள நிலையில் தற்போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு சாலைகளை கடந்து செல்வதும் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் வந்து செல்வதுமான காட்சிகள் இருந்துள்ளது
இது சிறுத்தையா அல்லது காட்டுப்பூனையா என்ற விவாதம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் அந்த பகுதியில் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறுத்தையாக இருந்தால் அதை கண்டிப்பாக கூண்டு வைத்துப் பிடித்து அப்பகுதி மக்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, ‘சிசிடிவி கேமராவில் பதிவானது காட்டு பூனை தான் எனவே மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் காட்டுப் பூனை வெளியே வந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout