ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுத்த விக்கீபிடியா

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை, தடை செய்ய வேண்டும் என்று பீட்டா எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதை தெரியவைத்துவிட்டது. 'வாடிவாசல்' என்ற சொல்லையே இதுவரை கேள்விப்படாதவர்களும் இன்று வாடிவாசல் குறித்து அறிந்து கொண்டனர். இதற்கு காரணமான பீட்டாவுக்கு நன்றிதான் கூற வேண்டும்
ஜல்லிக்கட்டுக்காக தற்போது நடைபெற்று வரும் எழுச்சி போராட்டம் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் பரவிவிட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விக்கிபீடியா ஒரு பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பக்கத்தில் ஜல்லிகட்டு குறித்து விரிவான விளக்கம், இதற்காக இளைஞர்கள், மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்த விரிவான தகவல்களை போராட்டத்தின் கோரிக்கைகள், சட்ட சிக்கல்கள், போராட்ட முறை, போராட்ட ஆதரவாளர்கள் போன்ற தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிகட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
மேலும் இந்த பக்கம் நேற்று தான் தொடங்கப்பட்டுள்ளது. அதற்குள் சுமார் 25000 பேர்களுக்கும் மேல் இந்த பக்கத்தை பார்வையிட்டுள்ளனர். தற்போது தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பக்கம் விரைவில் மற்ற மொழிகளிலும் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.