வெற்றி பெறும் முன்பே விக்கிபீடியாவில் இடம்பிடித்த தினகரன்

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணி முடிக்கப்பட்டுள்ள 8 சுற்றுகளிலும் தற்போது எண்ணப்பட்டு வரும் ஒன்பவதாவது சுற்றிலும் முன்னிலை வகித்து வருகிறார் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன். தினகரன் இதுவரை 39,548 வாக்குகள் பெற்றுள்ளார். 2ஆம் இடத்தில் உள்ள மதுசூதனன் 19,525 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த நிலையில் டிடிவி தினகரன், ஆர்.கே நகர் தொகுதியின் எம்.எல்.ஏ என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் அனைத்து சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் வெற்றியை அறிவித்த பின்னர் சட்டசபையில் அவர் பதவியேற்றுக்கொண்ட பின்னர்தான் எம்.எல்.ஏ என்று அழைக்கப்படுவார்

ஆனால் விக்கிபீடியா இணையதளத்தில் வாக்குகள் எண்ணிக்கொண்டிருக்கும்போது ஆர்.கே.நகர் தொகுதியின் 15வது எம்.எல்.ஏ தினகரன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் முறைப்படி முடிவை அறிவிக்கும் முன்பே இவ்வாறு அறிவிப்பது சட்டப்படி தவறு என்றாலும், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம் என்பதால் இதற்கு யாரும் பொறுப்பாக முடியாது என்பதே நிதர்சன உண்மை