கணவரின் உடலை தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற மனைவி: கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம்

  • IndiaGlitz, [Monday,July 20 2020]

கொரோனா அச்சம் காரணமாக இறந்த கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் உதவி செய்யாததால் சுடுகாட்டிற்கு அவரது மனைவி தனது மகன்களுடன் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி என்ற பகுதியை சேர்ந்தவர் சதாஷிவம் ரெட்டி. 55 வயதான செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டில் திடீரென மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது

ஆனால் சதாஷிவம் ரெட்டி கொரோனாவால் உயிர் இறந்ததாக அந்த பகுதியில் வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதியினர் மற்றும் சதாஷிவ ரெட்டியின் உறவினர் அவருடைய உடலை இறுதிச்சடங்கு செய்ய உதவிக்கு வரவில்லை. உறவினர்கள் பலரிடம் சதாஷிவம் மனைவி அக்கம்மா உதவிக்கு அழைத்தும் கொரோனா பயத்தால் யாரும் உதவி செய்யவில்லை,.

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட யாருமே கொரோனா பீதி காரணமாக மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்கு எடுத்துச் சொல்ல கூட முன்வரவில்லை. இதனை அடுத்து வேறு வழியின்றி ஒரு தள்ளுவண்டியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தனது கணவரின் உடலை வைத்து சுடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார் அக்கம்மா. அவரது இரண்டு மகன்களும் தள்ளுவண்டியை தள்ள உதவி செய்தனர். சுடுகாட்டில் யாருடைய உதவியுமின்றி அக்கம்மா தனது இரண்டு மகன்களின் உதவியால் இறுதிச்சடங்கை செய்தார்.

கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம் குறித்த இந்த சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

திருப்பதி கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு: கோயில் மூடப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ப்ரியாமணியின் பாடிபில்டிங்கிற்கு உதவிய கணவர்: வைரலாகும் புகைப்படம்

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக

அர்னாப் உடன் நேரலை விவாதத்தின்போது என்ன செய்து கொண்டிருந்தார் கஸ்தூரி: வைரலாகும் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்கள் குறித்து ஆவேசமாக பதிவு செய்வார் என்பது தெரிந்ததே

5000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: புதிய உச்சத்தால் தமிழகத்தில் அதிர்ச்சி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் ஒன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியுள்ளது

'சூரரை போற்று' ஒரு நிமிட வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சாரில் 'யூ' சான்றிதழும்