கணவரின் உடலை தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற மனைவி: கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அச்சம் காரணமாக இறந்த கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் உதவி செய்யாததால் சுடுகாட்டிற்கு அவரது மனைவி தனது மகன்களுடன் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி என்ற பகுதியை சேர்ந்தவர் சதாஷிவம் ரெட்டி. 55 வயதான செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டில் திடீரென மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது
ஆனால் சதாஷிவம் ரெட்டி கொரோனாவால் உயிர் இறந்ததாக அந்த பகுதியில் வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதியினர் மற்றும் சதாஷிவ ரெட்டியின் உறவினர் அவருடைய உடலை இறுதிச்சடங்கு செய்ய உதவிக்கு வரவில்லை. உறவினர்கள் பலரிடம் சதாஷிவம் மனைவி அக்கம்மா உதவிக்கு அழைத்தும் கொரோனா பயத்தால் யாரும் உதவி செய்யவில்லை,.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட யாருமே கொரோனா பீதி காரணமாக மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்கு எடுத்துச் சொல்ல கூட முன்வரவில்லை. இதனை அடுத்து வேறு வழியின்றி ஒரு தள்ளுவண்டியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தனது கணவரின் உடலை வைத்து சுடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார் அக்கம்மா. அவரது இரண்டு மகன்களும் தள்ளுவண்டியை தள்ள உதவி செய்தனர். சுடுகாட்டில் யாருடைய உதவியுமின்றி அக்கம்மா தனது இரண்டு மகன்களின் உதவியால் இறுதிச்சடங்கை செய்தார்.
கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம் குறித்த இந்த சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout