ஒடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளிவிட்ட மனைவி: உடனிருந்த மூவர் கள்ளக்காதலர்களா?

  • IndiaGlitz, [Thursday,January 02 2020]

திருத்தணி அருகே கணவனை மனைவியே ரயில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதாகவும் அவருக்கு 3 பேர் உதவி செய்ததாகவும் அவர்கள் கள்ளகாதலர்களா? அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் அஸ்வினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ராஜேந்திரன் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி உள்ளார். அவர் சென்ற ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென முகத்தை மூடி கர்சீப் கட்டியிருந்த ஒரு பெண்ணும் மூன்று பேரும் சேர்ந்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். ரயிலில் இருந்து கீழே விழுந்த ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் தனக்கும் தன்னுடைய மனைவி அஸ்வினிக்கும் அடிக்கடி தகராறு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தான் கூலிப்படைகளை வைத்து தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்

முகத்தை மூடிக்கொண்டு அஸ்வினியுடன் இருந்த மூவர் அவருடைய கள்ளக்காதலர்கள் அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கணவனை மனைவியே கூலிப்படையை வைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இதிலும் சாதனை புரிந்த இந்தியா!

புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பது அந்த குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில்

இன்று முதல் விண்ணில் பறக்கும் 'தர்பார்' விமானம்! வேற லெவல் புரமோஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

நடுக்கடலில் பிரபல நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த ஹர்திக் பாண்டியா: வைரலாகும் வீடியோ

நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் பிரபல நடிகை ஒருவருக்கு கிரிக்கெட் வீரர் லிப்கிஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது

சூரரை போற்று படத்தின் சூப்பர் அப்டேட் இதுதான்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'சூரரைப்போற்று' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'ஐயாம் சாரி, எனக்கு உருது தெரியாது'! ரஜினியை கலாய்த்த நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது