போதை கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

அழகில்லாத கணவனை கிரைண்டர் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்த மனைவி, டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன் என்ற வரிசையில் இன்று 24 மணி நேரமும் போதையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவருடைய மனைவி ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வடலூர் அருகே நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தானபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவருக்கு தவமணி, தமிழ்மணி என இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி தமிழ்மணி வீட்டிற்கு கணபதி செல்லும்போதெல்லாம் முழு போதையில்தான் செல்வாராம். போதையில் மனைவியிடம் தகராறு செய்வதே அவருக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல், தமிழ்மணியின் வீட்டிற்குச் சென்ற கணபதி, போதையில் தொந்தரவு செய்துள்ளார். அப்போது, கோவிலுக்கு படைப்பதற்காக, வடை சுட்டுக்கொண்டிருந்த தமிழ்மணி, ஆத்திரத்தில், கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய்யை, கணபதி மீது ஊற்றியுள்ளார்
இதனால் வலியால் அலறித்துடித்த கணபதி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முகம் முழுவதும் வெந்துபோன நிலையில் கணபதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கணபதியிடம் காயத்திற்கான காரணம் கேட்டபோது தன் மீது இரண்டு பேர் அமிலம் வீசியதாகத் தெரிவித்தார். ஆனால் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது அவருடைய மனைவி தமிழ்மணிதான் சுடச்சுட எண்ணெயை ஊற்றியது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிய தயார். இயக்குனர் கெளதமன்

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் பூட்டு போட்டனர்

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட பிரபல இயக்குனர் கைது

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வித்தியாசமான முறைகளில் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இதுதான். ராஜ்கிரண் கூறும் நிதர்சன உண்மை

உலகில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நார்வே உள்பட பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பலமுறை முயற்சி செய்தும் இன்னும் தீராத பிரச்சனையாக உள்ளது.

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னையும் விஜய்யையும் இணைத்து இயக்க தகுதியுள்ள ஒரே இயக்குனர் இவர்தான். மகேஷ்பாபு

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய்.