கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவி: மகள்-மகனும் உடந்தை

  • IndiaGlitz, [Sunday,November 03 2019]

சாத்தூர் அருகே கணவரை அவரது மனைவியே கொலை செய்து மகள் மற்றும் தாய் உதவியுடன் வீட்டின் தோட்டத்தை புதைத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாத்தூர் அருகே 55 வயது சுப்புராஜ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி பிச்சையம்மாளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுப்புராஜ் மனைவியிடம் தகராறு செய்தபோது நடந்த கலகலப்பில் சுப்புராஜ் படுகாயம் அடைந்து மயக்கமானார்.

ஆனால் சுப்புராஜ் இறந்துவிட்டதாக கருதிய பிச்சையம்மாள் வீட்டின் தோட்டத்தில் குழி தோண்டி, தன்னுடைய மகள் மற்றும் மகன் உதவியால் புதைத்துவிட்டார். இதனையடுத்து கணவர் கேரளாவிற்கு வேலை தேடி கேரளாவுக்கு சென்றிருப்பதாக கணவரின் உறவினர்களிடம் கூறி அனைவரையும் நம்ப வைத்தார்.

இந்த நிலையில் தீபாவளிக்கு கூட சுப்புராஜ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த சுப்புராஜின் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கணவரை கொலை செய்ததாக பிச்சையம்மாள் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிச்சையம்மாளை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மகனையும்மகளையும் கைது செய்தனர்.

More News

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் லாரன்ஸ்!

ராம்சரண்தேஜா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இந்த படம் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தெலுங்கு மொழியிலேயே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது 

'பிகில்' கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்த நாள் பரிசு!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்யின் இரண்டு கேரக்டர்களில்

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி

அமேசான் எடுத்த அதிரடி முடிவு: சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி

அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்கள் அனைத்து பொருட்களையும் அமேசான்

விஜய் டிவி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்: மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரியவராக இருந்த நிலையில்