கண்ணாமூச்சி விளையாடி கணவரை கொலை செய்த இளம்பெண்

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

சமீபத்தில் அனிதா என்ற இளம்பெண்ணுக்கு கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அனிதாவுக்கு ஒரு காதலன் இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்த அனிதாவின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து கதிரவனுடன் சென்னை திருவான்மியூர் பகுதிக்கு வந்த அனிதா கடந்த சில நாட்களாக நல்லமுறையில் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது கதிரவன், அனிதா இருவரும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினர். கதிரவன் கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் திடீரென வந்த ஒருசில மர்ம நபர்கள் கதிரவனை கடுமையாக தாக்கிவிட்டு அனிதாவின் நகைகளை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அனிதாவே தனது காதலனை வரவழைத்து நகைக்கொள்ளை நாடகம் ஆடி கதிரவனை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அனிதா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கதிரவன் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்துவிட்டதால் அனிதா மற்றும் அவரது காதலன் ஜெகன் ஆகியோர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திருமணம் ஆகி 25 நாட்களே ஆன நிலையில் மனைவியே கள்ளக்காதலன் துணையுடன் கணவரை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் இயங்க காரணமான மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 65.

'மீ டூ' கேள்வியால் ஆத்திரமான பாரதிராஜா

உலகம் முழுவதும் கடந்த ஆண்டே 'மீ டூ' ஹேஷ்டேக் பரபரப்பை ஏற்படுத்தினாலும் தமிழகத்திற்கு 'மீ டூ'வை அறிமுகம் செய்த பெருமை பாடகி சின்மயியை சாரும். வைரமுத்து மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு

சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறிப்பாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக

நடிகர் மீதான 'மீ டூ' குற்றச்சாட்டால் பதவி இழந்தாரா டி.கே.எஸ் இளங்கோவன்?

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திமுக அமைப்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா சத்யராஜ் மகள்?

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. நியூட்ரிஷன் படிப்பில் பி.எச்.டி படித்து வரும் திவ்யா, கடந்த சில ஆண்டுகளாக 'அக்சய பாத்திரம்'