2000 ரூபாய் மிக்ஸிக்காக கணவனை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
வீட்டில் உள்ள 2000 ரூபாய் மதிப்புள்ள மிக்ஸியை விற்று மது குடித்த கணவனை அவரது மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது
திருப்பூர் மீனாட்சி நகர் என்ற பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் உமாதேவி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நிவேதன் என்ற மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருமே அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக தெரிகிறது. மது குடிக்க காசு இல்லாததால் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் விற்று அவர் மது அருந்தியதாகவும் இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள மிக்ஸியை எடுத்து குறைந்த விலைக்கு விற்று அந்த பணம் முழுவதற்கும் வெங்கடேசன் மது அருந்தி விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமா தேவி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். மதுபோதையில் ரத்த காயத்துடன் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்
தான் கட்டையால் அடித்ததால் தனது கணவர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உமாதேவி, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் என்று விபத்தில் படுகாயம் அடைந்து விட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் விபத்தில் பலியானதற்கான அறிகுறியே இல்லை என தெரியவர போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கணவனை அடித்து கொலை செய்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து உமாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
2000 ரூபாய் மிக்ஸிக்காக கணவனை கட்டையால் அடித்து கொலை செய்தது ஒரு புறமிருக்க, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சிதறுண்டு போயுள்ளது. அப்பா மரணம் அடைந்து, அம்மா சிறையிலும் இருக்க இந்த தம்பதியின் மகன் நிவேதன் தற்போது ஆதரவின்றி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments