பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது!

  • IndiaGlitz, [Sunday,November 10 2019]

பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி தனது கணவருக்கு திருமணம் செய்து வந்த பெண்ணும் அவரது கணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதிகள் தங்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை கடத்தி தனது கணவருக்கு அவருடைய மனைவி செல்லக்கிளி திருமணம் செய்து வைத்துள்ளார்

சிறுமி காணாமல் அறிந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மகளிர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விசாரணை செய்ததில் செல்லக்கிளி தான் அந்த சிறுமியை கடத்தி தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து செல்லக்கிளியும் அவரது கணவர் அசோக்குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்

ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தனது கணவருக்கு பக்கத்து வீட்டு சிறுமியை திருமணம் செய்து வைத்த மனைவியின் இந்த கொடூர செயல் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது