மன்மத கொள்ளையன் முத்து சங்கு....! ஆபாச ஆபிசருக்கு ஆப்பு வைத்த மனைவி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மற்ற பெண்களிடம் உல்லாசமாகவும், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் காவலர் மீது மனைவி புகாரளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் காவலர் முத்து சங்கு. இவருக்கும் நாராயணபுரம் சிவமணி தெருவைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி என்பவருக்கும், கடந்த 2019- ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. முத்து என்பவர் காவல் துறையில், சார்பு ஆய்வாளராக வேலை செய்கிறார் என்று பொய் சொல்லி, திருமணம் செய்து வைத்துள்ளார்கள். பெண் வீட்டில் 25 பவுன் நகையும், 1 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சணையாக தந்துள்ளனர். இதையடுத்து திருமணமாகி மூன்றே மாதங்களில் முத்து சங்கு வீட்டில், வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் சில மாதங்களாக இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதுகுறித்து கடந்த 2020-இல் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுபாஷினி புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு முத்துசங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால், இதுகுறித்து பதில் கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளான் முத்து. "நான் இனி திருந்தி வாழ்வேன்" என அவர் எழுதிக் கொடுத்ததால், இதை நம்பிய மனைவியும் அவருடன் சென்று வாழலாம் என முடிவு செய்து, புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற சுபாஷினிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. பாலியல் ரீதியாக மனைவியை பல கொடுமைகளை செய்துள்ளான் முத்து.
இதன்பின் சந்தேகமடைந்த சுபாஷினி, முத்து சங்கு-வின் செல்போனை ஆய்வு செய்துள்ளார். முகநூல் செயலி மூலம் பல பொய்யான ஐடி-க்களை தயார் செய்து, அதன் மூலம் பெண்களிடம் பேசி தன்னை உயர் அதிகாரி போல காண்பித்துள்ளான். அதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச சேட் செய்தும், நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்தும் உள்ளான். அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிர்வாண புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பெண்களை மிரட்டி இவ்வளவு நாள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான். அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் நெருக்கமாக இருந்த நேரங்களில், அதை வீடியோவாக எடுத்துவிட்டு, கணவரிடம் காண்பித்து விடுவேன் என மிரட்டி பல பெண்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள், இனி என்னை விட்டு விடு என கெஞ்சி மெசேஜ்களை அனுப்பியுள்ளனர்.
இந்த தகவல்களை ஆதாரங்களுடன் திரட்டிய சுபாஷினி, நேரடியாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம், தன் பெற்றோர்களுடன் சென்று புகாரளித்தார். இது பற்றி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இது பற்றி சுபாஷினி கூறியிருப்பதாவது,
"என்னிடம் வரதட்சணை கேட்டும், பாலியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார் முத்து சங்கு. இதேபோல் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார். பெண்களிடம் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்து ஏமாற்றி வருகிறார்.என் வாழ்க்கை நன்றாக இல்லையென்றாலும் பரவாயில்லை, மற்ற பெண்கள் இவனை நம்பி ஏமாறக்கூடாது என்பதற்காகதான் புகார் கொடுத்துள்ளேன். இவரை பலரும் நல்லவர் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது பொய்" என கண்ணீருடன் கூறியுள்ளார் சுபாஷினி. சட்டத்தையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய காவலரே இதுபோன்று தவறு செய்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com