கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்து இளம்பெண்ணின் கண்ணீரை துடைத்த தியாக மனைவி!

  • IndiaGlitz, [Thursday,September 22 2022]

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து இளம் பெண் ஒருவரின் கண்ணீரை துடைத்து வைத்த மனைவியின் தியாக மனப்பான்மை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பதி பகுதியை சேர்ந்த கல்யாண் என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமானவர். அதே டிக் டாக் மூலம் பிரபலமான விமலா என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நித்யாஸ்ரீ என்பவர் இவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டார். விமலாவை சந்தித்த இளம் பெண் நித்யாஸ்ரீ, ‘உங்களை திருமணம் செய்வதற்கு முன்னர் கல்யாண் என்னைத்தான் காதலித்தார் என்றும் நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென எங்கள் உறவு சில காரணங்களால் முறிந்தது என்றும் அதன் பின்னர்தான் அவர் உங்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது தன்னால் கல்யாண் இல்லாமல் வாழ முடியாது என்றும் தனக்கு கல்யாணை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கெஞ்சினாள். நித்யாஸ்ரீயை இறக்கத்துடன் பார்த்த கல்யாண் மனைவி விமலா தனது வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்துவிட்டார்.

தனது கணவர் கல்யாண் உடன் பேசி நித்யாஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தார். தனது முன்னிலையிலேயே இருவருக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்தார். மேலும் இருவரிடமும் தானும் உங்களுடன் உடன் வாழ்வேன் என்றும் அவர் சத்தியம் வாங்கிக் கொண்டார். தற்போது மூன்று பேரும் ஒரே வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

பிங்க் உடையில் ஒரு பேரழகி.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான அதிதிஷங்கர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

கார்த்தி-ராஜூமுருகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் தகவல்!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

லக்கி போட்டோகிராபர்: ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்

நடிகை ரம்யா பாண்டியனை போட்டோஷூட் எடுத்தவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த போட்டோகிராபரை லக்கி என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர். 

கணவருடன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதை 3 மாதங்கள் கழித்து கூறிய பிரபல நடிகை!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த

'நானே வருவேன்' சென்சார் சான்றிதழ்: தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்