மகன் சாப்பிடாத ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!

  • IndiaGlitz, [Monday,May 04 2020]

மகன் சாப்பிடாத ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவியால் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் உள்ள பெல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர் அகிலேஷ் குமார். இவருக்கு ஆஷாகுமாரி என்ற மனைவியும் அயோக் குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் பெல் ஊரக குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பெல் தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக அகிலேஷ்குமார் வீட்டில்தான் இருந்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மகன் அயோக்குமார் சரியாக சாப்பிடவில்லை என்பதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்தது. இந்த சண்டை முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென ஆத்திரம் அடைந்த ஆஷா குமாரி காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கணவரை குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி மட்டும் செய்து ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆஷாகுமாரியை கைது செய்தனர். மகன் சாப்பிடவில்லை என்ற அற்ப காரணத்துக்காக கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டு தற்போது கணவன் கொலை செய்யப்பட்டும், மனைவி ஜெயிலுக்கும் சென்றுவிட்டதால் இவர்களின் ஐந்து வயது மகன் தனியாக இருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

சமூக சேவை செய்யும் இளைஞர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்த ராகவா லாரன்ஸ்

கொரோனா தடுப்பு நிதியாக ஏற்கனவே ரூபாய் 4 கோடிக்கும் மேல் நிதியுதவி செய்துள்ள நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தற்போது மேலும் தாய் என்ற அமைப்பை ஆரம்பித்து

டீக்கடைக்காரர் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்த அஜித்!

'தல' என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் அஜித், மனிதநேயம் மிக்கவர் என்றும், எதிரே இருப்பவர்களின் பார்வையில் இருந்தே அவர்களுக்கு என்ன தேவை

கோயம்பேட்டில் இருந்து சென்ற 7,500 தொழிலாளர்கள்: மாநிலம் முழுவதும் பரவும் ஆபத்து

சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 7,500 தொழிலாளர்கள் சென்றுள்ளதாகவும் அவர்களால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவு அபாயம் இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெ

வடகொரியா, தென் கொரிய எல்லை நோக்கி துப்பாக்கிச் சூடு!!! நடப்பது என்ன???

கொரியாவின் இருநாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது.

சென்னையில் இன்று முதல் என்னென்ன தளர்வுகள்: மாநகராட்சி அறிக்கை

இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்குவதை அடுத்து பொதுமக்கள் மேலும் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.