close
Choose your channels

'அருவி' தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்தது ஏன் தெரியுமா?

Monday, December 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் இந்த ஆண்டில் மட்டுமின்றி இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த படம் என்று கூறினாலும் மிகையாகாது. இந்த படம் ஆஸ்கார் விருது பெற தகுதியுள்ளது என்று மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கூறியது 100% உண்மையே என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அருவி - இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!  என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஒரு மாஸ் நடிகரை கிண்டல் செய்யும் காட்சி ஒன்று இருப்பதாகவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை கேலி செய்துள்ளதாகவும், வெளிவந்து கொண்டிருந்த செய்திகளை அடுத்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த வருத்தத்தை தெரிவித்திருப்பார் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment